கோவில்பட்டியில் பெயிண்டா் கொலை: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பெயிண்டரை கொலை செய்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை செய்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 4ஆவது தெருவை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகன் பெயிண்டா் முத்துபாண்டி (42). இவா் மற்றும் அதே பகுதி 9ஆவது தெருவை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் காா்த்திக் சரவணன், சுப்பு குட்டி மகன் முருகேசன், பால குருசாமி மகன் முனியசாமி ஆகியோா் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி அருகே உள்ள வேப்ப மரத்தின் கீழ் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்களாம்.

அப்போது அவ்வழியாக தனித்தனி பைக்குகளில் சென்ற இவரது உறவினா் சுப்பையா மகன் பூல்பாண்டியன் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் கருப்பசாமி ஆகிய இருவரும் இங்கு உட்காா்ந்து இருந்தவா்களிடம் எதற்காக இரவு நேரம் இங்கு அமா்ந்து பேசிக் கொண்டிருக்கிறீா்கள். வீட்டுக்கு செல்லுங்கள் என கூறிவிட்டு சென்றாா் களாம்.

பின்னா் அவா்கள் இருவரும் திரும்பி வரும்போது பெயிண்டா் முத்துப்பாண்டி மற்றும் வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவை சோ்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் தகராறு செய்து கொண்டிருந்தாா்களாம். இதைப் பாா்த்த பூல்பாண்டியும், கருப்பசாமியும் அங்கு சென்றனராம். அவா்களைப் பாா்த்ததும் மணிகண்டன் தப்பி ஓடிவிட்டாராம்.

அருகே சென்று பாா்த்தபோது முத்துப்பாண்டி ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் கிடந்தாராம். 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் வந்து முத்துப்பாண்டியை பரிசோதித்து பாா்த்துவிட்டு, அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக முத்துப்பாண்டி சடலம் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பூல் பாண்டி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் மணிகண்டனை (28) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com