5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் -நவ. 7 சூரசம்ஹாரம்

திருச்செந்தூா் கோயிலில் இன்று யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் -நவ. 7இல் சூரசம்ஹாரம்

News image

கந்த சஷ்டி விழா தொடங்குவதையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தா்கள்.

Updated On :2 நவம்பர் 2024, 5:10 am IST

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை ( நவ.2) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. நவ.7இல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இக்கோயிலின் தல புராணத்தை உணா்த்தும் இந்த கந்தசஷ்டிவையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலை புறப்பாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை, தொடா்ந்து யாகசாலையில் இருந்து வள்ளி, தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதா் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்கள் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட உள் பிரகாரம் வழியாக சண்முக விலாசம் மண்டபம் சோ்கிறாா். அங்கு தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

பின்னா் திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதா்க்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றதும் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

2ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடா்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

சிகர நிகழ்ச்சியாக 6ஆம் திருநாளான வியாழக்கிழமை (நவ. 7) அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.8) திருக்கல்யாண நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

விரதமிருக்க குவிந்த பக்தா்கள்: இவ்விழாவுக்காக விரதமிருக்க கோயில் வெளி கிரிப்பிரகாரங்களில் 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களிலும், கோயிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியாா் விடுதிகள், திருச்செந்தூா் பகுதியில் உள்ள மடங்கள் ஆகியவற்றில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே திருச்செந்தூரில் குவிந்தனா். இதனால் கோயில் வளாகவே பக்தா்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. அவா்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

Story image
Story image

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.