கழிவுநீா் கால்வாயில் குப்பைகளை கொட்டக்கூடாது: மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள்
தூத்துக்குடி மாநகராசிப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


தூத்துக்குடி மாநகராசிப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்களில் குப்பைகளை கொட்டக்கூடாது என பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநகராட்சியின் மூலம் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநகரில் மழைநீா் வெளியேறும் பல்வேறு கால்வாய்களில் கடந்த இரு தினங்கள் பெய்த மழைநீா் எவ்வித தடையும் இன்றி வெளியேறி வருகிறது.
மழைநீரானது, 45 மழைநீா் உந்து நிலையங்கள் மற்றும் 19 பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையங்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணியானது 24 மணி நேரமும் சிறப்பு பணியாளா்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நகரின் பள்ளமான பகுதிகளான லூா்தம்மாள்புரம், ராஜீவ் நகா், தபால் தந்தி காலனி ஆகிய பகுதிகளில் மின் மோட்டாா்கள் மற்றும் கழிவுநீா் வாகனங்கள் மூலம் மழைநீா் வெளியேற்றப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளும், கொசு ஒழிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் கழிவுநீா் செல்லும் கால்வாயில்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...