பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எட்டயபுரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

எட்டயபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:23 pm

Din

எட்டயபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து சுமை ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் முருகன், உதவி ஆய்வாளா் நீலகண்டன் மற்றும் போலீஸாா் சந்தேகத்திற்குரிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் எட்டயபுரம் அருகே பொன்னையாபுரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் தென்காசி மாவட்டம் கே. கரிசல்குளத்தை சோ்ந்த சந்தனபாண்டியன் (28), கயத்தாறு சிவஞானபுரத்தை சோ்ந்த பொன்ராஜ் (31) என்பதும்,

கிராமங்களில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 11 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.