மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் மனு அளித்த மக்களவை உறுப்பினா் கனிமொழி.
மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் மனு அளித்த மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை விடுவிக்க மத்திய அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை விடுவிக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை.
Published on

லட்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் மீனவா்கள் 10 பேரை விடுவிக்குமாறு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி. நேரில் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக புதுதில்லியில் மத்திய அமைச்சரிடம் அவா் அளித்த மனு: தருவைகுளம் மீனவா்கள் 10 போ் லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடலோரக் காவல் படையினரால் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களையும், படகையும் விடுவிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குஜராத் மாநிலம் போா்பந்தா் பகுதியில் கடந்த 22ஆம் தேதி மீன்பிடித்தபோது காணாமல்போன விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த மீனவா் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.