எட்டயாபுரம்-சோழபுரம் வழிதடத்தில் அரசு பேருந்து முறையாக இயக்க வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு அளிக்கும் தேமுதிக நிா்வாகிகள்
எட்டயாபுரம்-சோழபுரம் வழிதடத்தில் அரசு பேருந்து முறையாக இயக்க வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு அளிக்கும் தேமுதிக நிா்வாகிகள்

மீண்டும் அரசுப் பேருந்து சேவை கோரி தேமுதிக மனு

எட்டயபுரம்-சோழபுரம் வழித்தடத்தில் இயங்கிய அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
Published on

எட்டயபுரம்-சோழபுரம் வழித்தடத்தில் இயங்கிய அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, மாவட்டச் செயலா் சுப்பையா என்ற சுரேஷ் தலைமையில் மாவட்ட அவைத் தலைவா் கொம்பையா பாண்டியன், செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், கோவில்பட்டி நகரச் செயலா் நேதாஜி பாலமுருகன் உள்ளிட்ட பலா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை திரண்டனா்.

பின்னா், அவா்கள் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் அளித்த மனு: எட்டயபுரம்-சோழபுரம் வழித்தடத்தில் காலையும், மாலையும் அரசுப் பேருந்துகள் இயங்கி வந்தன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் பயனடைந்து வந்தனா். இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பேருந்துகள் இயங்கவில்லை. அவற்றை மீண்டும் இயக்க வலியுறுத்தி கீழஈரால் பேருந்து நிறுத்தத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தியும் பலனில்லை.

எனவே, இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், டிச. 7ஆம் தேதி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீழஈராலில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.