மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காந்தி ஜெயந்தி: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் அமைதிப் பேரணி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

News image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸாா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:07 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக, பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னா் மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தாா். பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி கடற்கரை சாலை, புதுத்தெரு, ம ட்ட கடை, வழியாக 1ஆம் ரயில்வே கேட் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

முன்னாள் மாவட்ட தலைவா் அருள், மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரபோஸ், மாமன்ற உறுப்பினா் எடிண்டா, ஐஎன்டியூசி மாநிலச் செயலா் ராஜ், மண்டலத் தலைவா்கள் ராஜன், சின்ன காளை, மிக்கேல் உள்பட பலா் பங்கேற்றனா்.