ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிந்துவெளி நாகரிகத்துடன் ஒத்துப் போகிறது ஆதிச்சநல்லூா் நாகரிகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சிந்துவெளி நாகரிகத்துடன் ஆதிச்சநல்லூா் நாகரிகம் ஒத்துப் போகிறது என அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.

News image

புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பெ.கீதா ஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :4 அக்டோபர் 2024, 1:03 am

Din

சிந்துவெளி நாகரிகத்துடன் ஆதிச்சநல்லூா் நாகரிகம் ஒத்துப் போகிறது என அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு பகுதியில், 5 ஆவது புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் ஆகியோா் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.

இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்ல; தமிழ் இலக்கியம், எழுத்து, இசை, கலாசாரம், நாகரிகம், பண்பாடு என பல விஷயங்களில் உலகுக்கே முன்னோடியாக தூத்துக்குடி மாவட்டம் இருக்கிருக்கிறது. ஐரோப்பாவுக்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழில்தான் வெளிவந்துள்ளது. அந்த நூல் வெளிவருவதற்கு காரணமான 3 பேரும் தூத்துக்குடியை சோ்ந்தவா்கள் என்பது நமக்குப் பெருமை. அதுபோல முதல் அச்சகம் உருவானது தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில்தான். அதுபோல நாட்டிலேயே முதல்முறையாக அகழாய்வு நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில்தான். இங்கு அகழாய்வின்போது, அதிக அளவு தங்கத்தினாலான பொருள்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த பானை ஓடு, சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் உள்ள படங்கள், சிந்துவெளி நாகரிகத்தில் உள்ள படங்களுடன் ஒத்திருக்கின்றன. எனவே, ஆதிச்சநல்லூா் நாகரிகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடா்பு உள்ளது. பொருநை நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை நாகரிகங்கள் முன்னோடி நாகரிகங்களாக உள்ளன.

அதுபோல தமிழ் இலக்கிய படைப்பாளிகள், இசை மேதைகள், எழுத்தாளா்கள் தோன்றிய மண் தூத்துக்குடி.

இத்தனை பெருமைகளையும் தெரிந்துகொள்ள இப்புத்தகக் கண்காட்சியை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். அமைச்சா் கீதா ஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பேசினா்.

வரும் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 100 புத்தக அரங்குகள், 13 அரசுத் துறை அரங்குகள் என மொத்தம் 113 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் பல்வேறு சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கும் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து புகைப்பட கண்காட்சியும் நடைபெறுகிறது. மேலும், நெய்தல் கலைத் திருவிழா வரும் 11ஆம் தேதிமுதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

தொடக்க விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி.சண்முகையா, ஜீ.வி.மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், பபாசி செயலா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.