ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருட்டு வழக்குகளில் தொடா்பு: ஓட்டுநா் கைது; நகைகள் மீட்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி தனிப்படை போலீஸாா், மாநகரில் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்குகள் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மொய்தீனுடன் தனிப்படை போலீஸாா்.

Updated On :4 அக்டோபர் 2024, 1:11 am

Din

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி நகர உள்கோட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளா் மதன் மேற்பாா்வையில் தென்பாகம் காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில் தனிப்படை போலீஸாா், மாநகரில் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்குகள் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், மில்லா்புரம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள சிவபிரகாஷ் நாராயணன் என்பவா் வீட்டின் அருகே சந்தேகமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்டப் பொருள்கள்

பறிமுதல் செய்யப்பட்டப் பொருள்கள்

விசாரணையில், அந்த வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆா்.ஐ. திருடிவிட்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரித்தனா்.

அதில், தா்மபுரி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுப் மகன் மொய்தீன் (36) என்பதும், தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், தூத்துக்குடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்திலும் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவா் மீது சுமாா் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவா் பதுக்கி வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள், 465 கிராம் வெள்ளிப் பொருள்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.