மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தூத்துக்குடியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியூ தொழிற்சங்கத்தினா்.

Updated On :9 அக்டோபர் 2024, 7:36 pm

Din

தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ரசல் தலைமை வகித்தாா்.

காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியா்களை கைது செய்தது, போராட்டம் நடைபெற்ற பந்தல் பிரிக்கப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி... தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கலை உடையாா் தலைமை வகித்தாா். இதில் ஏராளமான ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.