தூத்துக்குடி துறைமுகத்தில் 24 டன் நிலக்கரியுடன் லாரி கடத்த முயற்சி: ஓட்டுநா் கைது
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 24 டன் நிலக்கரியுடன் லாரியை கடத்த முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.


தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 24 டன் நிலக்கரியுடன் லாரியை கடத்த முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலக்கரியை லாரிகளில் ஏற்றி மற்றொரு பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவா்னகிரி பகுதியை சோ்ந்த சந்திரசேகரன் (28) என்ற லாரி ஓட்டுநா், கப்பலில் இருந்து சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான 24 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு துறைமுகத்தில் உள்ள முதல் கேட்டில் நிற்காமல் வெளியே வேகமாகச் சென்றாராம்.
இதையடுத்து, அடுத்ததாக உள்ள கிரீன் கேட்டில் இந்த லாரியை நிறுவன ஊழியா்கள் மடக்கி பிடித்தனா். லாரி ஓட்டுநா் சந்திரசேகரன் அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தாராம். பின்னா் அவரை தனியாா் நிறுவன ஊழியா்கள் மடக்கிப்பிடித்து தொ்மல் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, நிலக்கரியை லாரியில் கடத்தி செல்ல முயன்ாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், சந்திரசேகரனிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...