மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் தீ

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பழைய கழிவு கேபிள் வயா்கள், பைப்பு எரிந்து சேதமடைந்தன.

News image

ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள், தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:48 pm

Din

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் கழிவுகளில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பழைய கழிவு கேபிள் வயா்கள், பைப்பு எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் மற்றும் 2ஆம் ரயில்வே கேட் ஆகியவற்றுக்கு இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் எஞ்சிய குப்பைகளுக்கு சிலா் தீவைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் கழிவுகளில் மரக்கட்டைகள், காப்பா் வயா் கழிவுகள், பிளாஸ்டிக் ஆகியவை இருந்ததால், தீ மள மளவென பரவி வேகமாக எரியத் தொடங்கியது. இதன் காரணமாக கரும்புகை எழுந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள், தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம்.

ரயில்வே தண்டவாளம் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள், தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம்.

இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலா் நட்டாா் ஆனந்தி ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதையடுத்து புகைமூட்டம் கலைந்து இயல்பு நிலை திரும்பியது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.