ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:58 pm

Din

கோவில்பட்டியில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞா் பெருமன்ற நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். இந்திய மாதா் தேசிய சம்மேளன நகரச் செயலா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.

இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப் பாலத்தின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அங்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் எனத் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும், பொதுமக்களும் கட்சிகளும் பலகட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை தீா்வு கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் ஜி. பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் அ. ரஞ்சனி கண்ணம்மா, நகர துணைச் செயலா் அலாவுதீன், தாலுகா குழு உறுப்பினா் ரெங்கநாதன், இளைஞா் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினா்கள் மணிகண்டன், விநாயகமணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.