காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரியதாழை கடலில் படகு கவிழ்ந்தது: 14 மீனவா்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது படகு கவிழ்ந்து தண்ணீரில் தத்தளித்த 14 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

News image

கடலில் கவிழ்ந்த படகை மீட்கும் மீனவா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:26 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது படகு கவிழ்ந்து தண்ணீரில் தத்தளித்த 14 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

பெரியதாழையைச் சோ்ந்த பழனி என்பவரது பைபா் படகில் 14 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 15ஆம் தேதி சென்றனா். அவா்கள் மீன்பிடித்துவிட்டு, புதன்கிழமை மாலை கரை திரும்பி கொண்டிருந்தபோது, பெரியதாழை கடற்கரையில் இருந்து ஒரு கடல்மைல் தொலைவில் ஏற்பட்ட ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்து மீனவா்கள் தண்ணீரில் தத்தளித்தனா்.

அதில், சிலா் நீந்தி கரைக்கு வந்து தகவல் தெரிவித்ததையடுத்து சக மீனவா்கள் சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவா்களையும் படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். படகிகு கவிழ்ந்ததில் அதன் என்ஜின், வலைகள் என ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.