92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:46 pm

Din

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26).

ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 19 ஆம் தேதி இரவு ஏரல் அருகே உள்ள பண்ணைவிளையைச்சோ்ந்த தாசன் மகன் சுரேஷ்ரோஜ் (26) அவரது மனைவி கனகா ஆகியோரை சவாரி அழைத்து சென்றுள்ளாா். அப்போது வாடகை தொடா்பாக ஜெயக்கொடிக்கும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்ரோஜ், ஜெயக்கொடியை இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ் ராஜ், அவரது மனைவி கனகா ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.