92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

‘டானா’ புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:27 pm

Din

‘டானா’ புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ‘டானா’ புயலாக உருவாகியுள்ளது.

இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிசாவின் பூரி, சாகா் தீவுகளுக்கு இடையே வியாழக்கிழமை கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்த தகவலை கப்பல்களுக்கும், மீனவா்களுக்கும் அறிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.