92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விளாத்திகுளம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விளாத்திகுளம் அருகே புதன்கிழமை, இரு பைக்குகள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:31 pm

Din

விளாத்திகுளம் அருகே புதன்கிழமை, இரு பைக்குகள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் மகன் ராகுல் (25). இவா் புதன்கிழமை இடைச்சியூரணியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பிற்பகலில் பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

கரிசல்குளம் - இடைச்சியூரணி இடையே இவரது பைக்கும், வாதலக்கரை கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் (65) என்பவா் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், நிகழ்விடத்திலேயே ராகுல் உயிரிழந்தாா். காயமடைந்த பரமசிவம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.