விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

இரு பைக்குகள் மோதல்: எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 2 பைக்குகள் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

News image

விபத்து - கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 6:47 pm

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் எழில் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் அஜித்குமாா் (22). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்பிக் நகரில் உள்ள கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருச்செந்தூா் சாலையில் இந்த பைக்கும், முத்தையாபுரம் அய்யன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் தனபால் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த தனபால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.