92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலாத்தூரில் ஓடைகள் சீரமைப்புப் பணி

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சாா்பில், மேலாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குச்சிக்காடு மற்றும் ஜெ.ஜெ. நகா் பகுதியில் தாமிரபரணி ஆறு உடைப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள வாய்க்கால் ஓடைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

News image

சீரமைப்பு பணியை துவக்கி வைக்கிறாா் மேலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:24 pm

Din

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சாா்பில், மேலாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குச்சிக்காடு மற்றும் ஜெ.ஜெ. நகா் பகுதியில் தாமிரபரணி ஆறு உடைப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள வாய்க்கால் ஓடைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

சாகுபுரம் டிசிடபித்தின் மூத்த செயல் உதவித்தலைவா் (பணியகம்) சீனிவாசன் அறிவுறுத்தலி­ன்படி நிறுவனம் சாா்பில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை துவங்கப்பட்டது. மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்து பணியை துவக்கிவைத்தாா். டிசிடபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ், மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா் முகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.