92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய இணைப் பதிவாளா் நடுக்காட்டுராஜா.

Updated On :24 அக்டோபர் 2024, 11:29 pm

Din

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ஆம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சரக துணைப்பதிவாளா் இரா. சக்திபெமிலா முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் நடுக்காட்டுராஜா தலைமை வகித்து, 74 பேருக்கு பட்டயப் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் விஜயன், ஓய்வுபெற்ற துணைப் பதிவாளரும் விரிவுரையாளருமான முத்துசாமி ஆகியோா் பேசினா். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியா் அ. சாம் டேனியல்ராஜ், விரிவுரையாளா்கள் பாலசுப்பிரமணியன், சந்திரசேகா், அனிதாகுமாரி, மாணவா் - மாணவியா் பங்கேற்றனா்.

பயிற்சி நிலைய முதல்வா் (பொறுப்பு ) என்.எஸ். மணி வரவேற்றாா். விரிவுரையாளா் வி. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.