வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய பீடி இலை, மஞ்சள், ஆசிட் பறிமுதல்

பீடி இலை, மஞ்சள், ஆசிட் ஆகியவற்றை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
- கோப்புப்படம்
Updated On :6 செப்டம்பர் 2024, 8:53 pm

Din

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி இலை, மஞ்சள், ஆசிட் ஆகியவற்றை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையில், சுங்கத்துறை காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா், தனிப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

அங்கு, 21 மூட்டைகளில் சுமாா் 840 கிலோ பீடி இலைகள், 33 மூட்டைகளில் சுமாா் 2,310 கிலோ மஞ்சள், 100 கேன்களில் ஆசிட் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பதுக்கி வைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.