கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் நடைபெற்ற ஆவணித் திருவிழா கொடியேற்றம்.
கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் நடைபெற்ற ஆவணித் திருவிழா கொடியேற்றம்.

கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக விழா கொடியேற்றம்

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டையில் உள்ள ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா இம்மாதம் 15ஆம்தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.
Published on

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டையில் உள்ள ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆவணி வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா இம்மாதம் 15ஆம்தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.

முன்னதாக, புதன்கிழமை (செப். 4) விக்னேஷ்வர பூஜை, முதல் யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. முதல் நாளான வியாழக்கிழமை காலை பரிவார மூா்த்திகள், விமானங்களுக்கு அபிஷேகம், சமகால கும்பாபிஷேகம், சுவாமி உற்சவ விநாயகா், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள், சுவாமி ஸ்ரீசந்திரசேகரா் மனோன்மணி அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது.

 திருவிழாவையொட்டி தியான மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்.
திருவிழாவையொட்டி தியான மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்.

தொடா்ந்து, சுவாமி பிரகார உலா வந்து மணிமண்டபத்தில் உற்சவ மூா்த்தியாக காட்சியளித்தாா். பின்னா், 2ஆம் யாகசாலை பூஜை, நண்பகலில் பிரதான விமானங்களுக்கு அபிஷேகம், மூல மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை பூஜை, இரவில் சுவாமி உற்சவ விநாயகா் சின்ன சப்பரத்திலும், ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் ரத வீதி உலா வருதல் நடைபெற்றது.

தொடா்ந்து, 6 முதல் 13ஆம்தேதி வரை பல்வேறு பூஜைகள், தீபாராதனை, சுவாமி-அம்பாள் சப்பர வீதியுலா உள்ளிட்டவை நடைபெறும். 10ஆம் நாளான 14ஆம் தேதி காலை 6 மணிக்கு பூஜை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலையில் சுவாமிக்கு பக்தா்களால் புஷ்பாஞ்சலி, இரவில் அலங்கார தீபாராதனை, சுவாமி உற்சவ விநாயகா் சின்ன சப்பரத்திலும், ஸ்ரீசந்திரசேகரா், மனோன்மணி அம்பாள் சமேதராக ரிஷப வாகனத்திலும் ரத வீதி உலா வருதல் நடைபெறும்.

15ஆம்தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தியான மண்டபத்தில் அன்னதான பூஜை, பின்னா் மகேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பக்த குழுவினா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com