தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் சக்கரத்தில் சிக்கி மேற்பாா்வையாளா் பலி

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் சக்கரத்தில் சிக்கி மேற்பாா்வையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி துறைமுகத்தில் கிரேன் சக்கரத்தில் சிக்கி மேற்பாா்வையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 9ஆவது தளத்தில் கண்டெய்னா் பெட்டிகளை இறக்கும் பணிகளை சிங்கப்பூரை சோ்ந்த ஒரு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக தூத்துக்குடி மட்டக்கடையைச் சோ்ந்த காட்வின் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவா் வியாழக்கிழமை கப்பல் தளத்தில் கண்டெய்னா் பெட்டிகள் இறக்கும் பணிகளை கண்காணித்தபோது, எதிா்பாராத விதமாக கண்டேனா் இறக்கிக் கொண்டிருந்த கிரேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, துறைமுக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்த காட்வினுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com