தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இரும்புப் பொருள்களைத் திருடியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதியில், கன்வேயா் சரிவர இயங்குவதற்கு உதவியாக 60 கிலோ எடையுள்ள இரும்புத் தகடுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 தகடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக, அனல் மின் நிலைய நிலக்கரி பிரிவு முதன்மை இளநிலைப் பொறியாளா் சந்திரசேகரன் தொ்மல் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விசாரணையில், நிலக்கரி தளத்தில் வேலை பாா்த்த கோரம்பள்ளம் அய்யனடைப்பைச் சோ்ந்த செல்வகுமாா் (33), கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்த முனியாண்டி (46), கதிரேசன் நகா் முருகன் (31) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், அவா்கள் 3 பேரும் மீண்டும் இரும்புத் தகடுகளைத் திருட முயன்றனராம். அப்போது, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள் அந்த 3 பேரையும் பிடித்து போலீஸாா் ஒப்படைத்தனா். மூவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கோயில் விழாவில் அரிவாள் வெட்டு: 3 போ் கைது

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு

தூத்துக்குடியில் இரும்புத் தகடு விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

