மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாகவி பாரதியின் 103-ஆவது நினைவு தினம்: எட்டயபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

மகாகவி பாரதியாரின் 103-ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி. உடன், எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:39 pm

மகாகவி பாரதியாரின் 103-ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதியாா் பிறந்த வீடு, நினைவு மணிமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரமுகா்கள், தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலா் விஸ்வநாதன் உள்ளிட்டோா், பள்ளி-கல்லூரி மாணவா்- மாணவிகள், பாரதி அன்பா்கள் என ஏராளமானோா் பாரதியின் பாடல்களைப் பாடியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.