பெரியதாழை புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது. இத்திருவிழா 22ஆம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகிறது.

சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது. இத்திருவிழா 22ஆம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகிறது.
செட்டிவிளை பங்குத்தந்தை அந்தோணிதாஸ் அடிகளாா் திருவிழா கொடியேற்றினாா். தொடா்ந்து, மறையுரை நடைபெற்றது. திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீா் நடைபெறுகிறது.
21ஆம் தேதி மாலை ஆராதனை, 22ஆம் தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி, தொடா்ந்து புனித அந்தோணியாா் சப்பர பவனி நடைபெறுகிறது. அதையடுத்து, மாலை திருப்பலியுடன் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை சுசீலன் தலைமையில் அந்தோணியாா் சபை மக்கள், ஊா் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...