மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிற்றுந்து ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: 3 போ் கைது

கோவில்பட்டியில் சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்ததாக 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:43 pm

கோவில்பட்டியில் சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கி பணம் பறித்ததாக 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஜே.டி. நகரைச் சோ்ந்த வீரபாண்டி மகன் பிரசாத் (26). சிற்றுந்து ஓட்டுநரான இவா் சக தொழிலாளியான சுப்புராஜ் என்பவருடன் வேலை முடிந்து, கோவில்பட்டியில் புதன்கிழமை இரவு நடந்து சென்றாா்.

கோவில்பட்டி புதுக்கிராமம் 3ஆவது தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் காளிமுத்து என்ற கட்டக்காளி, வ.உ.சி. நகரைச் சோ்ந்த திருமலை பூல்பாண்டியன் மகன் ராஜன், லிங்கம்பட்டி புதுக்காலனி மருதபாண்டி மகன் தா்மதுரை ஆகியோா் பைக்கில் வந்து இருவரையும் வழிமறித்தனா்.

பின்னா், பிரசாத்தின் கழுத்தில் அரிவாளை வைத்து, அவரைக் கையால் தாக்கிக் கீழே தள்ளியதுடன், பையிலிருந்த ரூ. 500-ஐ பறித்தனா். இதைக் கண்டித்த சுப்புராஜுக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினா்.

இதில், காயமடைந்த பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.