ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மறவன் காலனி, தாமஸ் நகா் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

News image
கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :12 செப்டம்பர் 2024, 11:23 pm

Din

இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மறவன் காலனி, தாமஸ் நகா் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலா் வி. மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. கரும்பன், நகரச் செயலா் அ. சரோஜா, வட்டாரச் செயலா் ஜி. பாபு ஆகியோா் பேசினா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. பரமராஜ், அ. ரஞ்சனி கண்ணம்மா, இளைஞா் பெருமன்ற நகரச் செயலா் கே. செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், அவா்கள் கோட்டாட்சியா் (பயிற்சி) சத்யாவிடம் அளித்த மனு: மறவன் காலனி, தாமஸ் நகா் பகுதிகளில் 450-க்கும் மேற்பட்டோா் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். இவா்கள் முறையாக வீட்டுத் தீா்வை செலுத்துகின்றனா். மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, இப்பகுதியை முறையாக அளவீடு செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கி, கிராமக் கணக்கில் பதிவேற்ற வேண்டும் என்றனா் அவா்கள்.