மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிறுநாடாா் குடியிருப்பில் ஊராட்சி மன்றக் கட்டடத்துக்கு அடிக்கல்

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அடிக்கல் நாட்டிய உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங்.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:01 am

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சியில் புதிய ஊராட்சிக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு புதிய ஊராட்சிக் கட்டடம் கட்ட வேண்டும் என அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, அமைச்சா் உத்தரவின்பேரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 20 லட்சம், பொது நிதியில் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதையடுத்து நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு, சிறுநாடாா்குடியிருப்பு ஊராட்சித் தலைவி கமலம் அம்மாள் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகவிஜயன், கவிதா, ஒன்றியப் பொறியாளா் காா்த்திகேயன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயகமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் அடிக்கல் நாட்டினாா்.

உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் அலாவுதீன், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் யோகேஷ், திரளானோா் பங்கேற்றனா்.