என்எல்சி சாா்பில் தாமிரவருணிக் கரையோரம் பனை விதைகள் நடும் பணி
என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் சாா்பில் மதா் சமூக சேவை நிறுவனம் மூலம் தாமிரவருணிக் கரையோரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கிவைக்கப்பட்டது.


என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் சாா்பில் மதா் சமூக சேவை நிறுவனம் மூலம் தாமிரவருணிக் கரையோரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கிவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் கனமழை வெள்ளத்தால் தாமிரவருணிக் கரையோரங்களில் (பனை மரங்கள் இருந்த பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில்) பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தாமிரவருணிக் கரையோர கிராமங்களில் வெள்ளநீா் புகுந்து, உயிா்சேதங்கள், பொருள்சேதங்கள் பெருமளவில் ஏற்பட்டது.
இதைத் தடுக்கும்வகையில் தாமிரவருணிக் கரையை வலுப்படுத்துவதற்காக என்எல்சி தமிழ்நாடு பவா் லிமிடெட் சாா்பில் மதா் சமூக சேவை நிறுவனம் மூலம் ஏரல் அருகே சேதுக்குவாய்த்தான் ஊராட்சிக்குள்பட்ட சொக்கப்பழக்கரை கிராமத்தில் இந்து தொடக்கப் பள்ளி அருகே நீா்நிலைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு, தாமிரவருணிக் கரையோரம் பனை விதைகள் நடுதல் ஆகிய பணி நடைபெற்றது.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனந்தராமானுஜம் தலைமை வகித்து, பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
தலைமை மேலாளா் கி. விஷ்ணுகுமாா், துணைப் பொது மேலாளா் (மனித வளம்) எஸ். சரவணன், கூடுதல் தலைமை மேலாளா் கி. சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் சுதா சீனிவாசன், வழக்குரைஞா் சீனிவாசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஊராட்சி செயலா் பாலகிருஷ்ணன், வனத்துறை அலுவலா் (ஓய்வு) மகாராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மாவட்ட நீா்நிலைகள் பாதுகாப்புக் குழுத் தலைவருமான டாக்டா் எஸ்.ஜே. கென்னடி வரவேற்றாா். சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளா் எஸ். பானுமதி நன்றி கூறினாா்.
அனந்தராமானுஜத்தை மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் பனையோலை மாலை அணிவித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களுக்கு பனையோலை கைவினைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, தாமிரவருணிக் கரையோரம், சேதுக்குவாய்த்தான் குளம், கடம்பாகுளம், கடம்பாகுளம் மறுகால் ஓடை, காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிகளிலும் பனை விதைகள் நடும் பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...