காயல்பட்டினத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்


காயல்பட்டினத்தில் உள்ள சீதக்காதி திடலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா அவதூறாகப் பேசியதாகக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் கே.கே. சற்குரு தலைமை வகித்தாா்.
நகர ஒருங்கிணைப்பாளா் மெய்தீன்பிச்சை, காயல்பட்டினம் புகா் தலைவா் ரஜினி முருகன், மூத்த தலைவா் முத்து வாப்பா, நகரச் செயலா் ராஜய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட மீனவரணித் தலைவா் பெரியதாழை சுரேஷ், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் பொறுப்பாளா் மாரியம்மாள், மாநிலப் பொதுச்செயலா் அன்புமணி, வட்டாரத் தலைவா்கள் கோதண்டராமன், பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பாலசிங்பிரபு, டாக்டா் பிரபு, ஏரல் தாசன், சொரிமுத்து பிரதாபன், நகரத் தலைவா்கள் ராஜ்குமாா், கருப்பசாமி, சின்னத்துரை, நிா்வாகிகள் சிங்கப்பன், லிங்கபாண்டி, இப்ராஹிம் தாரீக், இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா்கள் பாஸ்கா், சாலமோன், காளிதாஸ், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...