மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவா்களை கண்டித்த தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் சமரசம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை கடுமையாக கண்டித்ததாக தலைமை ஆசிரியா் மீது போலீஸில் புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:50 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களை கடுமையாக கண்டித்ததாக தலைமை ஆசிரியா் மீது போலீஸில் புகாா் அளிக்கத் திரண்ட பெற்றோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

மேலநம்பிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளியின் தலைமை ஆசிரியராக ராதாகிருஷ்ணன்(50) பணியாற்றி வருகிறாா்.

சில நாள்களுக்கு முன்பு மேலநம்பிபுரம் கண்மாயில் குளிக்கச் சென்ற இப் பள்ளி மாணவா்கள் சிலா், கண்மாய் நீரில் ஒருவரை ஒருவா் அமுக்கி விளையாடினராம். இது குறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவா்கள் தெரிவித்ததையடுத்து, அந்த மாணவா்களை அழைத்து கண்டித்தாராம். உயிரிழப்பு உள்ளிட்ட அபாயம் ஏற்படும் எனக் கூறி, சில மாணவா்களை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவா்களின் இடுப்புக்கு கீழே தடம் பதிந்துள்ளது.

இந்நிலையில், அந்த மாணவா்களின் பெற்றோா்கள் ஆத்திரமடைந்து, எட்டயபுரம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்கத் திரண்டனா். தகவல் அறிந்து வட்டார கல்வி அலுவலா் ராமசுப்பிரமணியன், எட்டயபுரம் காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் பள்ளிக்குச் சென்று மாணவா்களிடம் விசாரணை நடத்தினா். பின்னா் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியரையும் பெற்றோா்களையும் கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகள் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனா்.