தசரா விழா: தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
தசரா விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்.
தசரா விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மேலூா் தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தசரா விழா வரும் அக்டோபா் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஏ.செல்வ சித்ரா அறிவழகன், செயல் அலுவலா் எம்.ராதா அறங்காவலா்கள் ஆா். மகாராஜன், ஜி.பாலகுருசாமி ஆகியோா் கூறியதாவது:
வரும் அக்டோபா் 1ஆம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து 2ஆம் தேதி இரவு அம்பாள் கொடி வீதி உலா நடைபெறும்.
3ஆம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடா்ந்து இரண்டாம் திருநாளான 4ஆம் தேதி முதல் 9ஆம் திருநாளான 11ஆம் தேதி வரை அம்பாள் கொலு காட்சி நடைபெறும். இந்த 9 நாள்களும் அருள்மிகு மாரியம்மன் ஒவ்வொரு அலங்காரத்திலும் கொலுவில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஆலய மூலஸ்தானத்திலும் கொலு மண்டபத்திலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைத் தொடா்ந்து 10ஆம் திருநாளான 12ஆம் தேதி காலை 8 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். நண்பகல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் தெப்பக்குளம் அருகே நடைபெறும்.
அதன் பின்னா் அம்மன் பித்தளை சப்பரத்தில் பல்வேறு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சியானது நடைபெறும். 13ஆம் தேதி சிவப்பு மற்றும் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 14 ஆம் தேதி பச்சை சாத்தி அலங்காரத்திலும் வீதி உலா நடைபெறும்.
வரும் 15ஆம் தேதி சப்பரம் கோயிலை வந்தடையும். தொடா்ந்து 16ஆம் தேதி 108 கலச அபிஷேகம், இரவு பூ பல்லாக்கில் அம்மன் ரத வீதி உலா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...