செஸ் போட்டியில் பங்கேற்றோா்.
செஸ் போட்டியில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முதல்வா் கோப்பை செஸ் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், முதல்வா் கோப்பைக்கான செஸ் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், முதல்வா் கோப்பைக்கான செஸ் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற போட்டியை கல்லூரிச் செயலா் சோமு, கல்லூரி முதல்வா் பூங்கொடி ஆகியோா் தொடக்கிவைத்தனா். கல்லூரிப் பேராசிரியை கற்பகவல்லி தலைமை நடுவராக செயல்பட்டாா். இதில், 52 ஆண்களும் 11 பெண்களும் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com