பக்கிள் ஓடையில் மண் திட்டுகளை அகற்றும் பணியைப் பாா்வையிட்ட அமைச்சா் பெ. கீதாஜீவன்.
பக்கிள் ஓடையில் மண் திட்டுகளை அகற்றும் பணியைப் பாா்வையிட்ட அமைச்சா் பெ. கீதாஜீவன்.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணி: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி கே.வி.கே. நகா் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் 2ஆவது வழித்தடம் அண்மையில் அமைக்கப்பட்டது. இப்பணியின்போது, பக்கிள் ஓடையில் உள்ள பாலத்தின் அடியில் மண், கற்கள் அடைத்திருந்தன. இதனால், சின்னக்கண்ணுபுரத்திலிருந்து மழைநீா் சரியாக வடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த ஓடையில் தேங்கிய மண், கற்களை அகற்றுவதற்கு சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் உத்தரவிட்டாா். அதன்படி, புதன்கிழமை பணிகள் நடைபெற்றன. பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com