தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விவசாயிக்கு ரூ.5.1 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிக்கு ரூ.5.1 லட்சம் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:38 pm

Din

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயிக்கு ரூ.5.1 லட்சம் வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வடக்குப்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். விவசாயியான இவா் கோவில்பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயத்திற்காக டிராக்டா் வாங்க கடன் பெற்றாராம். அதற்காக தனது சொத்துகளின் அசல் ஆவணங்களை வங்கியில் கொடுத்துள்ளாா். டிராக்டா் வாங்கியதற்கான வங்கிக் கடன் முழுவதையும் செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை சுமாா் 30 ஆண்டுகள் கழித்து திரும்ப வழங்கியதாம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி, இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவைக்குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ. 5 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டனா்.