தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாக்கடைக் கால்வாயில் தொழிலாளி சடலம்: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூரில் சாக்கடைக் கால்வாயில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:46 pm

Din

திருச்செந்தூரில் சாக்கடைக் கால்வாயில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.

திருச்செந்தூா் முத்தாரம்மன் கோயில் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (55). தொழிலாளியான இவருக்கு மனைவி முருகம்மாள், 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். அவா்களில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளதாம்.

இசக்கிமுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (செப். 24) பஜாருக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினா் பல்வேறு இடங்களிலும் தேடிவந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள சாக்கடை கால்வாய் அருகே அவரது சைக்கிள் கிடந்துள்ளது. கால்வாய்க்குள் அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.