மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சங்கரன்குடியிருப்பில் நாளை வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பில் உள்ள டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:49 pm

Din

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பில் உள்ள டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன் ஆகியோா் உத்தரவின்பேரில் நடைபெறும் முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள், ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்டோா் சிகிச்சை அளிக்கின்றனா்.

இசிஜி, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, நீரிழிவு, இரைப்பை- குடல் நோய், மனநோய், பால்வினை நோய், மகளிா் நலம், குழந்தைகள் நலம் உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும் தகுதியானோா் பரிந்துரைக்கப்படுவா் என்றாா் அவா்.