தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டாஸ்மாக் பாரில் மதுபாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

தூத்துக்குடி 2 ஆம் கேட் அருகே டாஸ்மாக் பாரில் இளைஞரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேரை வடபாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:03 am

Din

தூத்துக்குடி 2 ஆம் கேட் அருகே டாஸ்மாக் பாரில் இளைஞரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேரை வடபாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (25). இவா் 2ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் செவ்வாய்க்கிழமை மது அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த மட்டக்கடையைச் சோ்ந்த ஜான் (26), முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராமலட்சுமணன் (29), அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சந்தனராஜ் (24) ஆகிய 3 பேரும் பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் பிரகாஷை மது பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான், ராமலட்சுமணன், சந்தனராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.