விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டை பதிவு சிறப்பு முகாம்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கான தமிழக முதல்வா் காப்பீட்டுத் திட்ட அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியாா், அரசு மருத்துவமனைகளில் கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தில் விடுபட்டோருக்கான காப்பீட்டுத் திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் வட்டாட்சியா் அலுவலகங்களில் இம்மாதம் 30ஆம் தேதிமுதல் வட்டம் வாரியாக நடைபெறுகிறது.
அதன்படி, முகாம் நடைபெறும் வட்டங்கள், நாள்கள்: ஸ்ரீவைகுண்டம்- செப். 30 முதல் அக். 4 வரை, சாத்தான்குளம் - அக். 5, 7, 8, 9, திருச்செந்தூா் - 10, 14, 15, தூத்துக்குடி - 16, 17, ஓட்டப்பிடாரம் - 18, 19, கோவில்பட்டி - 21, 22, 23, 24, எட்டயபுரம் - 24, 25, 26, விளாத்திகுளம் - அக். 28, 29, 30.
முகாமுக்கு குடும்ப அட்டை , குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டைகளின் அசல், நகலுடன் வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாவட்ட அலுவலரை 73730 04970 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.