மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மூன்றரை ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் வழங்குகிறாா் அமைச்சா் பெ.கீதா ஜீவன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்குடன் ‘உரிமைகள் திட்டம்’ என்பதை செயல்படுத்துகிறது. இதுவரை மாவட்டத்தில் 6,642 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 480 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.55 கோடியில் விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 23 பேருக்கு ரூ.26.09 லட்சத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 721 பேருக்கு ரூ.96.24 லட்சத்தில் திறன்பேசிகளும், 310 பேருக்கு ரூ.28.98 லட்சத்தில் சிறப்பு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட 65 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.88 லட்சத்தில் மூன்று சக்கர சைக்கிள்கள், 66 பயனாளிகளுக்கு ரூ.2.23 கோடியில் திருமண உதவித்தொகை, ரூ.24.32 லட்சத்தில் 512 கிராம் தங்க நாணயங்கள், 606 பேருக்கு ரூ.41.45 லட்சத்தில் விலையில்லா மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள், 95 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ.13.94 லட்சத்தில் நிவாரணத்தொகை, 108 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.14 கோடியில் பேட்டரி சக்கர நாற்காலிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,030 மாற்றுத்திறன் மாணவா்- மாணவிகளுக்கு ரூ.56.44 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.68 லட்சத்தில் காதொலி கருவிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.96 லட்சத்தில் செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

75 சதவீதத்திற்கு மேல் உடல் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1500இல் இருந்து ரூ.2,000ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் ரூ.51 கோடியே 60 லட்சத்து 96 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நடமாடும் சிகிச்சைப் பிரிவு மூலம் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 4,436 பயனாளிகளுக்கு ரூ.80.87 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வா் புதிதாக அறிவித்த ரைட்ஸ் திட்டத்தின் மூலமாக மகளிா் திட்ட பணியாளா்களைக் கொண்டு நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனா்.