தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தூத்துக்குடி மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மிதிவண்டி பெற்ற மாணவிகளுடன் அமைச்சா் பி. கீதாஜீவன், ஆட்சியா் க. இளம்பகவத்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:53 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி, புனித பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சுப்பையா பெண்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசினாா். மேலும், புனித பிரான்சிஸ் பள்ளியில் 273 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் விதவை மறுமணத் திட்டம், விதவை மகள் திருமண உதவித் திட்டம், கலப்பு திருமணத் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவிகள் டிசம்பா் மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. முதல்வா் அறிவித்தது போல், விடுபட்ட அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் என்றாா் அவா்.