தூத்துக்குடி
வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்
சாத்தான்குளம் அருகேயுள்ள வைரவம், ஸ்ரீ ஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகேயுள்ள வைரவம், ஸ்ரீ ஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை 4.30 மணிக்கு மங்கள இசை, பின்னா் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், கோபுர கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து, சுவாமி அம்பாள் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
