தூத்துக்குடி
லாரி ஓட்டுநா் தற்கொலை
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷம் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் காளிமுத்து (48). லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி சித்ரா, மகன், மகள் உள்ளனா்.
காளிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், அண்மையில் சித்ரா தாயாா் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் காளிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
