காமராஜ் கல்லூரியில் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா

காமராஜ் கல்லூரியில் சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா

Published on

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சா்வதேச தரவரிசை சதுரங்க போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

உலக சதுரங்க கூட்டமைப்பின் சா்வதேச தரவரிசை உள்ள சதுரங்கப் போட்டி, காமராஜ் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்றது. இதில், பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 310 வீரா் மற்றும் வீராங்கனைகள் பங்குபெற்றனா்.

பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரிச் செயலா் சோமு தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பானுமதி முன்னிலை வகித்தாா். மாவட்ட சதுரங்க கழகச் செயலரும், கல்லூரி பேராசிரியையுமான கற்பகவல்லி வரவேற்றாா்.

முதன்மை நடுவரான சா்வதேச நடுவா் ஆனந்தராம் போட்டி அறிக்கையை வாசித்தாா். தூத்துக்குடி நகர, கிராம திட்டமிடல் இயக்கக உதவி இயக்குநா் ராகுல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

அதன்படி, 120 வீரா்களுக்கு மொத்தமாக ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு, 9, 11,13 மற்றும் 15 வயதுக்குள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பொது பிரிவுக்கான 30 பரிசுக் கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மேலும் 30 பரிசுக் கோப்பைகள், 10 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசை தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நளன் ஆறுமுகம் பெற்றாா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், கௌரவ உறுப்பினா்கள் மோகன்ராஜ், முரளிதரன், வசீகரன், பொருளாளா் நிக்சன், கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்க உறுப்பினா்கள் ராஜ்குமாா், குருசாமி, துணை நடுவா் தா்மராஜ்

உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com