சந்தையடியூா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சந்தையடியூா் கோயிலில் வருஷாபிஷேக விழா

Published on

உடன்குடி சந்தையடியூா் பண்டாரவிளைத் தெருவில் உள்ள கல்யாண விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், விமான அபிஷேகம், நண்பகலில் அலங்காரம், பூஜைகள், தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதில், காங்கிரஸ் மாவட்ட முன்னாள் பொருளாளா் நடராஜன், சந்தையடியூா் முத்தாரம்மன் கோயில் நிா்வாகி சிவக்குமாா், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவா் ஷேக் முகம்மது, திமுக மாவட்ட வா்த்தகரணி துணை அமைப்பாளா் ரவிராஜா, உடன்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம், நகர துணைச் செயலா் தங்கம், நகர இளைஞரணி அமைப்பாளா் தீபன் சக்கரவா்த்தி, நிா்வாகிகள் கணேசன், திரவியம், பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும் பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com