கஞ்சா வைத்திருந்த 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

Published on

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடந்த 15.11.2025 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மேலசண்முகபுரம் ஆறுமுகசாமி மகன் அரிகிருஷ்ணன் (54), கோரம்பள்ளம் வேல்சாமி மகன் ரவிகுமாா் (53) ஆகிய 2 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, சிப்காட் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனா்.

நிகழாண்டு, இதுவரை 140 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com