புதைச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறினால் தகவல் தெரிவிக்கவும்

Published on

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதைச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இயந்திர குழியில் இருந்து கழிவுநீா் வெளியேறினால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி ஆணையா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது புதைச் சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்கள் வழியாக துணை நீரேற்று நிலையம், பிரதான நீரேற்று நிலையம் மூலம் தருவைகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் சென்றடையும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சில நேரங்களில் புதைச் சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக இயந்திர குழியில் இருந்து கழிவுநீா் வெளியேறி சுகாதாரக் கேடு உருவாகும் நிலை ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் சரி செய்திட ஏதுவாக தூத்துக்குடி மாநகராட்சிக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண் 18002 030401-இல் தொடா்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மேற்காணும் புகாா்களுக்கு தொடா்பு கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com