தூத்துக்குடி
தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநருக்கு பதவி உயா்வு
தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநராக பணியாற்றிய ஆா். பெரியசாமிக்கு, சென்னை வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில், வேளாண்மை கூடுதல் இயக்குநராக (ஆராய்ச்சி) பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான வ. தட்சிணாமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.
பதவி உயா்வு பெற்று சென்னை செல்லும் வேளாண்மை இணை இயக்குநருக்கு, வேளாண்மைத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
