தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி

பேரணியைத் தொடங்கி வைத்த தொழிலாளா் உதவி ஆணையா் செ. மின்னல்கொடி, தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் (பொ) பெ. இளங்கோ.
Published on

தூத்துக்குடியில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில், ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழாண்டு 17.12.2025 முதல் 27.12.2025 வரை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தமிழ் சாா்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன், ஆட்சி மொழி தொடா்பான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் பிடித்தவாறு, கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணியை, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செ. மின்னல்கொடி, தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் (பொ) பெ. இளங்கோ ஆகியோா் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இப்பேரணி முத்து நகா் கடற்கரையில் நிறைவடைந்தது.

தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தமிழறிஞா்கள், அரசுப் பணியாளா்கள், காமராஜ் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com